தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழா : "எந்த மொழியில் என்பதை தெளிவுப்படுத்துக" - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழ் முறைப்படி நடத்த உத்தரவிடக் கோரி செந்தில்நாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

Update: 2020-01-23 04:03 GMT
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழ் முறைப்படி நடத்த உத்தரவிடக் கோரி செந்தில்நாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான இந்து அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர், தமிழ் ஆகம விதிப்படிதான் கும்பாபிஷேக பூஜைகள் நடப்பதாக தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், விசாரணையை வரும்  27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்