"கூட்டணியில் முரண்பாடு வருவது இயல்பு" - வி.சி.க தலைவர் திருமாவளவன் கருத்து
திமுகவுடன் கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல்களில் ஒரு சில இடங்களில் தனியாக போட்டியிட்டாலும் திமுகவுடன் கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை எனவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி தொடரும் என்றார்.