சுகாதாரமான பிரசாதம் - நெல்லையப்பர் கோவில் முதலிடம்

தமிழகத்தில் சுகாதாரமான முறையில் பிரசாதம் தயாரிக்கும் கோவில்களில் நெல்லை நெல்லையப்பர் கோவில் முதலிடத்தை பெற்றுள்ளது.

Update: 2020-01-18 05:43 GMT
தமிழகத்தில் சுகாதாரமான முறையில் பிரசாதம் தயாரிக்கும் கோவில்களில் நெல்லை நெல்லையப்பர் கோவில் முதலிடத்தை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தை சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவில் பெற்றுள்ளது. மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் குடியரசு தின விழாவில் இந்து சமய அறநிலையத்துறையின் நெல்லை மண்டல இணை ஆணையரிடம் வழங்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்