துணை முதல்வர் புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறு, புறப்பட தயாரான நிலையில் கோளாறு கண்டுபிடிப்பு

சென்னை விமான நிலையத்தில், மதுரை செல்வதற்காக துணை முதலமைச்சர் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார்.

Update: 2020-01-13 19:04 GMT
சென்னை விமான நிலையத்தில், மதுரை செல்வதற்காக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வந்திருந்தார். அவர், உள்பட 149 பயணிகளுடன் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து, உடனடியாக, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீண்டும் விமானம் நடைமேடைக்கு கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, தொழில்நுட்ப வல்லுனர்களால், கோளாறு சரிசெய்யப்பட்டு, இரண்டு மணிநேரம் தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்