சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு : தொடர்புடையோரின் புகைப்படம் வெளியீடு
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள், இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் வழக்கில் தொடர்புடையவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள், இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் வழக்கில் தொடர்புடையவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. வில்சனை சுட்டுக் கொன்றதாக தவ்ஃபீக் மற்றும் அப்துல் சமீம் என்ற இரண்டு நபர்களின் புகைப்படத்தை கன்னியாகுமரி காவல்துறை வெளியிட்டுள்ளது. இதில் அப்துல் சமீம் கடந்த 2014-ஆம் ஆண்டு, சென்னை அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்தவர் என கூறப்படுகிறது. அதன் பின் அவர் தலைமறைவானதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.