"மன்னர் கால சிலைகளை பாதுகாக்க வேண்டும்" : புதிய ஐஜி-க்கு சமூக ஆர்வலர்கள், மக்கள் கோரிக்கை
கும்பகோணம் சிவன்கோவிலில் உள்ள மன்னர் கால சிலைகளை பாதுக்காக்க வேண்டும் என்று, சிலை கடுத்தல் தடுப்பு பிரிவு ஐஜிக்கு சமூக ஆர்வலர்கள், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்பகோணத்தில், விஜயராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டு, ராஜ ராஜ சோழன் காலத்தில் புனரமைக்கப்பட்ட சிவயோகிநாதர் கோவிலில், பண்ட கால மன்னர்கள் 20க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகளை வழங்கியுள்ளனர்.
அந்த சிலைகள் போதிய பாதுகாப்பு இல்லாமல் தற்போது கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா இருந்தாலும், துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பாதுகாப்பு வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதுவரை துப்பாக்கி ஏந்திய போலீசார் நியமிக்கப்படவில்லை என கூறப்படும் நிலையில், புதிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி, இதற்கு நடவடிக்கை வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.