"தமிழின் தொன்மையை உணர்த்துகிறது தொல்காப்பியம்" : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெருமிதம்
தமிழின் இலக்கியங்களில் ஒன்றான தொல்காப்பியத்தில், தமிழக கலாச்சாரம் மற்றும் ஐந்து வகை நிலப்பரப்பின் இசை, கலாச்சாரம் குறித்து விளக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெருமையுடன் கூறினார்.
தமிழின் இலக்கியங்களில் ஒன்றான தொல்காப்பியத்தில், தமிழக கலாச்சாரம் மற்றும் ஐந்து வகை நிலப்பரப்பின் இசை, கலாச்சாரம் குறித்து விளக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெருமையுடன் கூறினார். மத்திய அரசின் கலாச்சார துறை சார்பில், தென்னிந்திய கலாச்சார மையம் நடத்தும் "பாரதீய லோக் உத்சவ்" நிகழ்ச்சியை ஆளுநர் பன்வரிலால் புரோகித் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். சென்னை கேரள சமாஜத்தில், ஆறு நாட்கள் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள நடன கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.