16 பணியாளர்கள் இயக்கும் பிரமாண்ட டிரக் லாரி : வியப்புடன் பார்த்து செல்லும் வாகன ஓட்டிகள்

திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடிக்கு வந்த 320 டயர்கள் கொண்ட மிகப்பெரிய டிரக் லாரியை வாகன ஓட்டிகள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

Update: 2019-12-19 10:02 GMT
திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடிக்கு வந்த 320 டயர்கள் கொண்ட மிகப்பெரிய டிரக் லாரியை வாகன ஓட்டிகள்  வியப்புடன் பார்த்து சென்றனர். குஜராத் மாநிலத்தில் இருந்து பெரிய உருளை இயந்திரம் உப்பூர் அனல் மின் நிலையத்திற்காக எடுத்து வரப்பட்ட‌து. இந்த பெரிய உருளை இயந்திரத்தை கொண்டுவர, 320 டயர்கள் கொண்ட ராட்சத டிரக் லாரி கொண்டுவரப்பட்டது. இந்த டிரக் லாரி 78 மீட்டர் நீளம், 21 அடி அகலம், 19 அடி உயரம் கொண்டது. முன்புறமும், பின்புறமும் 2 இன்ஜின்கள் கொண்ட இந்த டிரக்கை மொத்தம் 16 பணியாளர்கள் இயக்கி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்