அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம்- தமிழக அரசின் கேள்விக்கு பதிலளிக்க மத்திய அரசு மீண்டும் மறுப்பு
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசின் கேள்விக்கு பதிலளிக்க மத்திய அரசு இரண்டாவது முறையாக மறுத்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசின் கேள்விக்கு பதிலளிக்க மத்திய அரசு இரண்டாவது முறையாக மறுத்துள்ளது. தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவிகித இட ஒதுக்கீடு தொடரலாம் என மத்திய அரசு தெரிவித்தால் மட்டுமே, சிறப்பு அந்தஸ்தை ஏற்போம் என ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.