நிலத்தை வேறொருவருக்கு கிரையம் செய்த மகன் - மாவட்ட ஆட்சியரிடம் தாய் கண்ணீர் மல்க மனு
திருப்பத்தூரில் நிலத்தை மகன் வேறொருவருக்கு கிரையம் செய்ததை அடுத்து மாவட்ட ஆட்சியரிடம் தாய் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார்
திருப்பத்தூர் அடுத்த திம்மணாமுத்தூர் பகுதியை சேர்ந்த ராஜம்மாள் 5 சென்ட் நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், அவரது மூத்த மகன் புருஷோத்தமன் தாய்க்கு தெரியாமல் நிலத்தை வேறொருவருக்கு கிரையம் செய்துள்ளார். இதனால் வீட்டை காலி செய்ய வலியுறுத்தியதால், ராஜம்மாளுக்கும் புருஷோத்தமனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தாயை கடுமையாக தாக்கிய புருஷோத்தமன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து புகார் கொடுத்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி மாவட்ட ஆட்சியரிடம் ராஜம்மாள் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.