உடல் திறனை மேம்படுத்த விளையாட்டுப் போட்டி - மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தார் நடிகர் ஜீவா
இளைஞர்களின் உடல் திறனை மேம்படுத்தும் விளையாட்டு போட்டிகளை நடத்த நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நடிகர் ஜீவா கோரியுள்ளார்.
இளைஞர்களின் உடல் திறனை மேம்படுத்தும் விளையாட்டு போட்டிகளை நடத்த, நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நடிகர் ஜீவா கோரியுள்ளார். சென்னை பெசன்ட் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை துவங்கி வைத்த ஜீவா இவ்வாறு பேசினார். 5, 10, 21 கிலோ மீட்டர் தூரம் என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கபில்தேவ் வாழ்க்கை வரலாறு படத்தில், அவரது நண்பரான ஸ்ரீகாந்த் வேடத்தில் தாம் நடிக்க உள்ளதாக கூறினார்.