காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையத்தில் வசதிகள் : அமைச்சர் கருப்பணன் கோரிக்கை
ஈரோடு, சத்தியமங்கலம் அருகே உள்ள பகுத்தம்பாளையம் பகுதியில் 2 புள்ளி 5 கோடி ரூபாய் செலவில் காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, சத்தியமங்கலம் அருகே உள்ள பகுத்தம்பாளையம் பகுதியில் 2 புள்ளி 5 கோடி ரூபாய் செலவில் காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நிர்வாக கட்டிடத்தின் திறப்பு விழாவில் அமைச்சர்கள் கருப்பணன், உடுமலை ராதாகிருஷ்ணன், செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கருப்பணன், காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையத்தில் தார்சாலை, தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதை கேட்ட அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், உடனடியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.