கனவில் பேய் விரட்டியதால் கிணற்றில் விழுந்த கூலி தொழிலாளி

கன்னியாகுமரியில் கனவில் பேய் விரட்டிய பயத்தில் கிணற்றில் விழுந்த கூலித்தொழிலாளி தீயணைப்பு துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டார்.

Update: 2019-11-22 19:10 GMT
கன்னியாகுமரி மாவட்டம் ஐரேணிபுரம் அருகே ஆயினிவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன். கூலி தொழிலாளியான இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது பேய் விரட்டுவதாக கனவு கண்டதாக கூறப்படுகிறது. இதில் பயந்து வீட்டிலிருந்து ஓட்டம் பிடித்த அவர், அருகே இருந்த கோயில் கிணற்றில் குதித்ததாக தெரிகிறது.  இந்நிலையில், காலை கோயிலுக்குச் வந்த அர்ச்சகர், கிணற்றில் இருந்து சத்தம் கேட்டதை அடுத்து உள்ளே பார்த்துள்ளார். அப்போது உள்ளே ஒரு அடி தண்ணீரில் ஸ்டீபன், நின்று கொண்டு இருப்பதை கண்ட அவர், அதுகுறித்து ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், அரை மணி நேரம் போராடி வலை கட்டி கிணற்றில் இருந்து சிறு காயத்துடன் ஸ்டீபனை மீட்டனர். இதைத்தொடர்ந்து உண்மையில் பேய் பயத்தில் கிணற்றில் விழுந்தாரா இல்லை வேறு ஏதாவது காரணமா என போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்