தமிழகம் - புதுச்சேரியில் பரவலாக மழை

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

Update: 2019-11-22 07:28 GMT
தேனி மாவட்டம், பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை பரவலாக மழை பெய்தது. கும்பக்கரை, சோத்துப்பாறை, முருகமலை, வடுகபட்டி, மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. 

* கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. காட்டுமன்னார்கோவில், புவனகிரி,  லால்பேட்டை, திருநாரையூர், பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் உள்ளிட்ட  பகுதிகளில் பெய்த கனமழையால், அப்பகுதிகளில் நெல் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

* ராமேஸ்வரம் தீவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மழை காரணமாக, காலை பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகினர்.

* புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இன்று காலை கனமழை பெய்தது.  இதனால், நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், மழை காரணமாக சில தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்தன.

Tags:    

மேலும் செய்திகள்