காரைக்குடியில் 200 சவரன் நகை கொள்ளை : ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் மர்மநபர்கள் கைவரிசை
காரைக்குடியில் பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஜவுளி கடை நடத்தி வருபவர் இளங்கோ மணி. குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுவிட்டு, வீடு திரும்பிய இவர், வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் உள்ளே இருந்த 6 அறைகள் உடைக்கப்பட்டு, 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அவர், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த காரைக்குடி டிஎஸ்பி அருண் தலைமையிலான போலீசார், 200 சவரன் நகைகளுடன் மாயமான கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.