அண்ணா பல்கலை கழகத்துக்கு உயர்புகழ் தகுதி : பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கிடைக்கும் உயர்புகழ் தகுதி என்கிற அரிய வாய்ப்பை தமிழக அரசு இழந்துவிடக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2019-11-05 10:18 GMT
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கிடைக்கும் உயர்புகழ் தகுதி என்கிற அரிய வாய்ப்பை தமிழக அரசு இழந்துவிடக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெற 10 அரசு பல்கலைக்கழகங்கள், 10 தனியார் பல்கலைக்கழகங்களை தரம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் இடம் பெற்றுள்ள நிலையில் உயர் தகுதி அளித்தாலும் மாணவர் சேர்க்கையில்  69 சதவீத இடஒதுக்கீடு தொடரும் என அறிவித்துள்ளது. இதையடுத்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகின் தலை சிறந்த கல்வி நிறுவனமாக முன்னேறுவதற்கு கிடைத்த வாய்ப்பை தமிழக அரசு பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்