புதிய மின் இணைப்பு வழங்க ரூ.2500 லஞ்சம் : உதவி செயற்பொறியாளர் கைது

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே புதிய மின் இணைப்பு வழங்க 2 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-11-05 03:51 GMT
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே  புதிய  மின் இணைப்பு வழங்க 2 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். முக்கூடல் பகுதியைச் சேர்ந்த முத்தரசன் என்பவர் தான் கட்டி வரும் புதிய வீட்டுக்கு  மின்இணைப்பு வழங்க கோரி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் என்பவரை அணுகியுள்ளார். புதிய மின் இணைப்பு வழங்க 2 ஆயிரத்து 500 ரூபாய்  லஞ்சமாக கண்ணன் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர், முத்தரனிடம் இருந்து பணத்தை பெறும் போது கண்ணனை கையும் களவுமாக பிடித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்