நவீனமாகும் 8 வன விரிவாக்க மையம் : ரூ.2.4 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு
சென்னை, காஞ்சிபுரம் உள்பட தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் உள்ள வன விரிவாக்க மையங்கள் நவீனப்படுத்தப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம் உள்பட தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் உள்ள வன விரிவாக்க மையங்கள் நவீனப்படுத்தப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக 2 கோடியே 40 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவையின் அடிப்படையில் நாற்றாங்கால் உற்பத்தி செய்யவும், வன விரிவாக்க மையங்களை நவீனப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.