"கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு குறைந்த பட்ச தண்டனை" - மாவட்ட அமர்வு நீதிபதி விளக்கம் அளிக்க உத்தரவு

கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்கியது தொடர்பாக திங்கள்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க விருதுநகர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Update: 2019-10-18 19:55 GMT
அருப்புக்கோட்டை கல்யாணசுந்தரபுரத்தை சேர்ந்த ராஜமாணிக்கம். அவரது  மகன் மாரிராஜ்,  ஜேசுராஜ் , ஸ்டீபன் ஆகியோர் மீதான கொலை வழக்கில் அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. பத்து ஆண்டு மற்றும் 7 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி கொலை வழக்கில் பத்தாண்டு மற்றும் 7 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி விருதுநகர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற  மதுரைக் கிளை நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு ,கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அதோடு அபராதம் விதிக்கப்படுவது தானே வழக்கம் என்றும், இந்த வழக்கில் அமர்வு நீதிபதி ஒருவர் குறைந்த தண்டனை வழங்கியது ஆச்சரியமாக உள்ளது என கருத்து தெரிவித்ததுடன், விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்