பிரதமர் மோடி-சீன அதிபர் வருகை - முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு
பிரதமர் மோடி சீன அதிபர் ஜிஜின்பிங் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.
பிரதமர் நரேந்திரமோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங், சந்திப்பு மாமல்லபுரத்தில் வருகிற 11 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, மாமல்லபுரம் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளது. பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாமல்லபுரம் சென்றுள்ளார். அங்கு தலைமைச்செயலாளர் சண்முகம், மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதையடுத்து, புராதன சின்னங்கள் உள்ள பகுதிகளான அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோயில், வெண்ணெய் பாறை, ஐந்துரதம் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை முதலமைச்சர் நேரில் பார்வையிட உள்ளார்.