"அண்ணா பல்கலையில் சமஸ்கிருதம் திணிப்பு" - ஸ்டாலின் கண்டனம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டி உள்ள திமுக தலைவர் ஸ்டாலின், இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-25 20:27 GMT
அண்ணா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டி உள்ள திமுக தலைவர் ஸ்டாலின், இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமது டுவிட்டர் வலைப்பதிவில், இந்திய - மேல்நாட்டு தத்துவப்படிப்பு என்ற பெயரில் சமஸ்கிருதம் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளதை  சுட்டிக்காட்டி உள்ளார். மற்றொரு பதிவில், கீழடி அகழாய்வுகள் வெளியாகி, தொல் தமிழர்களின்- திராவிட பண்பாட்டின் தொன்மையையும் பெருமையையும் உலகம் அறிந்துள்ள நிலையில், தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். எனவே, பல்கலைக்கழகத்திற்கு பொறுப்பு வகிக்கும் ஆளுநரும், உயர் கல்வித்துறையும் இந்த பண்பாட்டு ஆதிக்க பாடத்திட்டத்தை மாற்றிட வேண்டும் என்று, ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்