டெங்கு காய்ச்சல் : "போர்க்கால நடவடிக்கை தேவை" - ஸ்டாலின்
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முதலமைச்சர் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முதலமைச்சர் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை மதுரவாயலைச் சேர்ந்த ரோகித், முகப்பேர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி மகாலட்சுமி ஆகிய பச்சிளங்குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியிருப்பது வேதனையும், அதிர்ச்சியும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.