முதியவரை தாக்கி கொள்ளை முயற்சி : 2 பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் 70 வயது முதியவரை தாக்கி, செல்போன், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த வழக்கில் 2 பேரை கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் 70 வயது முதியவரை தாக்கி, செல்போன், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த வழக்கில் 2 பேரை கைது செய்துள்ளனர். முதியவரை தாக்கி வழிப்பறி செய்த சிசிடிவி காட்சிகளுடன், தந்தி டிவியில் செய்தி வெளியிட்டது. இந்த நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக ஆரணியைச் சேர்ந்த மண்டை என்கிற மணிகண்டன், மணி என்கிற மணிகண்டன் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். தப்பி ஓடிய சூர்யா என்பவனை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குள் நிலுவையில் உள்ளதாக போலீசார் கூறினர்.