குறுக்குதுறை சுப்ரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம்
நெல்லை குறுக்குதுறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
நெல்லை குறுக்குதுறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 3ஆம் தேதி தொடங்கிய ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனையொட்டி, அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, சுப்ரமணிய சுவாமிக்கு மரக்கேடயத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுப்பிரமணியசுவாமி திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர், ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.