ஓணம் பண்டிகை எதிரொலி - வாழைத்தார் விலை உயர்வு
கேரள வியாபாரிகள் வாழைத்தார் கொள்முதலுக்காக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு படையெடுத்துள்ளனர்.
கேரளாவில் ஒணம் பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கியுள்ள நிலையில், கேரள வியாபாரிகள் , வாழைத்தார் கொள்முதலுக்காக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு படையெடுத்துள்ளனர். வழக்கமாக நேந்திரம் பழம் கிலோ 30 முதல் 35 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது கேரள வியாபாரிகள் வருகையால் கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.