நெல்லை : குறுக்குத்துறை முருகன் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2019-09-03 06:29 GMT
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு மூலவர் சுப்பிரமணிய சுவாமி மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆதாரனைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து மகா யாகம் நடத்தப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், வருகிற 12ஆம் தேதி நடைபெறுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்