மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 48 ஆயிரம் கனஅடியில் இருந்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

Update: 2019-08-15 09:06 GMT
கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 48 ஆயிரம் கனஅடியில் இருந்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரியில் கூடுதலாக 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் 110 புள்ளி மூன்று மூன்று அடியாகவும், நீர் இருப்பு 78 புள்ளி எட்டு ஏழு டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது. பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்