போக்குவரத்து மேம்பாடு - ரூ.146.78 கோடி ஒதுக்கீடு : அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு

தமிழகத்தில் போக்குவரத்தை மேம்படுத்த 147 கோடி ரூபாயை ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது .

Update: 2019-08-01 09:36 GMT
தமிழகத்தில் போக்குவரத்தை மேம்படுத்த  147 கோடி ரூபாயை ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது . ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வெளியாகி உள்ள இந்த அரசாணையில், 700 குறு பாலங்கள், 250 சிறு பாலங்கள், 100 தரைப்பாலங்கள் ஆகியவை நடப்பாண்டில் கட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 146 கோடியே 78 லட்சத்தில், 114 கோடியே 12 லட்ச ரூபாயை மத்திய அரசு வழங்கும் எனவும்,  32 கோடியே 66 லட்சத்தை  மாநில அரசும் வழங்கும் எனவும், அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்