"காஞ்சிபுரம் அல்லது திருவள்ளூர் அரசு சட்டக்கல்லூரிக்கு... மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கன் பெயர் சூட்டலாம்"
காஞ்சிபுரம் அல்லது திருவள்ளூர் அரசு சட்டக்கல்லூரிக்கு மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கன் பெயரை சூட்டலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வந்த டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, இரண்டாக பிரிக்கப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்தில் 5 ஆண்டு சட்டப்படிப்பும், திருவள்ளூர் மாவட்டம் பட்டரைப் பெரும்புதூரில் 3 ஆண்டு சட்டப்படிப்பும் கற்பிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து சட்டக்கல்லூரி இடமாற்றத்தை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இரண்டு கல்லூரிகளும் ஒரே பெயரில் செயல்படுவதால் ஏற்படும் குழப்பத்தை தடுக்க , ஒரு கல்லூரிக்கு மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கன் பெயரை சூட்ட பரிந்துரைத்துடன், தமிழக அரசே இது குறித்து முடிவு செய்யலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.