150 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.10 கோடி கடன் - இந்தியன் வங்கி சார்பில் வழங்கப்பட்டது

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 150 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 10 கோடி ரூபாய் அளவிற்கு இந்தியன் வங்கி சார்பில் கடன் வழங்கப்பட்டது.

Update: 2019-07-31 08:59 GMT
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 150 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 10 கோடி ரூபாய் அளவிற்கு, இந்தியன் வங்கி சார்பில் கடன் வழங்கப்பட்டது. இந்தியன் வங்கியின் திருவாரூர் மண்டலத்திற்கு உட்பட்ட மன்னர்குடி சுய உதவி குழுவின் சார்பில், கடன் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் இந்த கடன் உதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாய் விபத்து காப்பீடு தொகைக்கான காசோலையும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை இந்தியன் வங்கியின் கள பொதுமேலாளர் சந்திராரெட்டி இந்த காசோலைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
Tags:    

மேலும் செய்திகள்