கர்நாடக அணைகளில் இருந்து 7500 கன அடி நீர் வருகை... நிரம்பி வரும் ஒகேனக்கல் அருவிகள்

கர்நாடகா அணைகளில் இருந்து 7500 கன அடி நீர் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.

Update: 2019-07-25 09:16 GMT
கர்நாடகா அணைகளில் இருந்து 7500 கன அடி நீர் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. கர்நாடக, கேரள மாநிலங்களில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கேஆர்எஸ், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து உபரி நீர் வெளியற்றப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி 7500 கன அடியாக நீர் வரத்து உள்ளது. இதனால், ஒகேனக்கலில் சினிபால்ஸ் அருவி, மெயின் அருவி, ஐந்தருவிகளில் நீர் சீராக வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் 3வது நாளாக ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்