ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கோரி பிரதமருக்கு 10 ஆயிரம் தபால்கள் அனுப்பிய இளைஞர் அமைப்பினர்

திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் 10 ஆயிரம் தபால்கள் அனுப்பிவைக்கப்பட்டது.

Update: 2019-07-24 10:45 GMT
திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் 10 ஆயிரம் தபால்கள் அனுப்பிவைக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க, வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடவும், டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவும் கோரி, திருவாரூரில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பிரதமர் மோடிக்கு 10 ஆயிரம் தபால்களை அனுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்