"கட்டாயம் ஹெல்மெட் அணியுங்கள் இல்லையென்றால் சைக்கிளில் செல்லுங்கள்" - காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் பேச்சு
ஹெல்மெட் அணிய முடியவில்லை என்றால் சைக்கிள் ஓட்டுவது நல்லது என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
ஹெல்மெட் அணிய முடியவில்லை என்றால் சைக்கிள் ஓட்டுவது நல்லது என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார். ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகன பேரணி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தொடங்கியது. இந்த பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹெல்மெட் அணிவதில் இருந்து யாருக்கும் விதி விலக்கு கிடையாது என்றார். முதலில் அரசு அலுவலர்கள் அனைவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று குறிப்பிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், அப்போது தான் பொதுமக்கள் ஹெல்மெட் அணிவார்கள் என்று தெரிவித்தார்.