தரமற்ற சாலைகள் - ஒப்பந்ததாரர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? : உயர் நீதிமன்றம் கேள்வி…

ஒப்பந்த விதிகளை மீறி தரமற்ற சாலைகளை அமைத்த ஒப்பந்ததாரர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2019-07-01 21:26 GMT
ஒப்பந்த விதிகளை மீறி தரமற்ற சாலைகளை அமைத்த ஒப்பந்ததாரர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது  தொடர்பான வழக்கு  நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, சென்னையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சாலைகள் புதிதாக போடப்படுவதாகவும், தண்ணீர் லாரிகள் செல்வதால் சாலைகள் சேதமடையும் போது மட்டும் அவை சரி செய்யப்படுவதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சாலைகள் தரமாக அமைக்கப்பட வில்லை என்றால், ஒரே நிறுவனத்துக்கு ஏன் மீண்டும் மீண்டும் ஒப்பந்தம் வழங்கப்படுகிறது எனவும், தரமற்ற சாலையை அமைத்த ஒப்பந்த நிறுவனத்தின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும்  நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் .  சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்திற்கு உதவ சிறப்பு வழக்கறிஞரை நியமித்து ஆய்வு செய்ய உத்தரவிட நேரிடும் எனவும்  நீதிபதிகள் எச்சரித்தனர்.  சென்னையில் சாலைகள் அமைக்க எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? அதில் எவ்வளவு செலவு செய்யப்பட்டது? யாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது? எத்தனை சாலை பணிகள் இதுவரை முடிந்துள்ளது? நிலுவையில் உள்ள பணிகள் எவ்வளவு என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 8 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்