நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த 4 பேர் மீதான வழக்கு : 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி உத்தரவு

திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டுக்கு மிரட்டல் விடுத்த நான்கு பேர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

Update: 2019-07-01 20:27 GMT
திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டுக்கு மிரட்டல் விடுத்த நான்கு பேர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இதுதொடர்பாக விழுப்புரத்தைச் சேர்ந்த செந்தில்குமார், சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன், திருவண்ணாமலையைச் சேர்ந்த ரகுபதி, திண்டிவனத்தைச் சேர்ந்த ம  ஜெய்னுதீன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்ட  நான்கு பேரும் இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்