மாசடைந்த 6 ஆறுகளை மேம்படுத்த திட்டம் :14 அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் கருப்பணன்
தமிழகத்தில் மாசடைந்துள்ள 6 ஆறுகளின் மாசினை குறைக்க நீர் தர மேலாண்மை பிரிவு 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் உள்ளிட்ட 14 புதிய அறிவிப்புகளை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் பேரவையில் வெளியிட்டார்.
தமிழகத்தில் மாசடைந்துள்ள 6 ஆறுகளின் மாசினை குறைக்க நீர் தர மேலாண்மை பிரிவு 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் உள்ளிட்ட 14 புதிய அறிவிப்புகளை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் பேரவையில் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், அரசு அலுவலர்கள், விஞ்ஞானிகள், இளம் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கிராமப்புற பங்குதாரர்கள் காலநிலை மாற்றம் குறித்து தெரிந்துகொள்ளும் வகையில் அண்ணா பல்கலைகழகத்தில் காலநிலை தகவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தப்படும் என்றார்