"அரசு பள்ளிகளுக்கு கட்டிடங்கள் கட்டித்தரப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
வருவாய்த்துறை மூலம் நிலம் ஒதுக்கப்பட்ட இடங்களில் அரசு பள்ளிகளுக்கு கட்டிடங்கள் கட்டித்தரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து பேசிய அவர், பல இடங்களில் பள்ளி கூட கட்டிடங்கள் கட்ட வருவாய்த்துறை மூலம் நிலம் ஒதுக்கப்பட்ட நிலையில், அதற்கான நிதி ஒதுக்கப்படாமல் உள்ளதாக தெரிவித்தார். முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து, எங்கெங்கெல்லாம் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதோ அந்த இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு கட்டிடம் கட்டித்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.