சென்னை, மேற்கு வங்க துறைமுகங்களில் கடல் மட்டம் உயர்வு

சென்னை மற்றும் மேற்கு வங்க துறை முகங்களில் கடல்நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக, நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-06-30 23:11 GMT
இந்தியாவின் முக்கிய துறைமுகங்களில் கடல் மட்டம் உயர்ந்து வருவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தெரிவித்தார். செயற்கைகோள் அனுப்பிய படங்களை வைத்து கடற்கரைகளை ஆய்வு செய்தபோது, 1 புள்ளி 46 மில்லி மீட்டர், கடல் நீர் மட்டம் உயர்ந்துள்ளது, தெரியவந்தது. இந்திய கடற்கரைகளில் கடல் மட்டம் ஆண்டொன்றுக்கு 1 புள்ளி 3 மில்லி மீட்டர் உயர்ந்து கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் அசுவினி குமார் சவுபே தெரிவித்தார். கேரள எம்பி. ஆன்றோ ஆண்டனி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு இந்த பதிலை அவர் அளித்தார். கச்சா எண்ணெய், மீத்தேன் போன்ற புதைவடிவ எரிபொருள் எடுப்பதினால் ஏற்படும் வெப்பத்தால் இந்த உயர்வு ஏற்படுவதாக அவர் கூறினார். 35 ஆண்டுகளுக்குள் 2 புள்ளி 2 மில்லி மீட்டர் வரை கடல் நீர் உயரும் என்றும் மேற்கு வங்கத்தின் டைமண்ட் துறைமுகத்தில் தான் இந்தியாவிலேயே அதிகளவில் உயர்ந்துள்ளது என்றும் கூறினார். சென்னை துறைமுகத்தில்தான் மிகக் குறைவாக புள்ளி 33 மில்லி மீட்டர் அளவு கடல் மட்டம் உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்