மேலவளவு படுகொலை நினைவு தினம் அனுசரிப்பு : இன்று மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு

மதுரை மாவட்டம் மேலவளவு பகுதியில் இன்று மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2019-06-30 21:33 GMT
மதுரை மாவட்டம் மேலவளவு பகுதியில் இன்று மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 1997ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மேலவளவு ஊராட்சித் தலைவர் முருகேசன் உட்பட ஆறு பேரை மற்றொரு சமூகத்தினர் வெட்டி படுகொலை செய்தனர். அதன் நினைவு தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. இந்த சூழலில் அங்கு அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் விதமாக நேற்று மாலை 6 மணி முதல் இன்று மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்