அத்திவரதர் தரிசன நிகழ்வு : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று தொடங்குகிறது

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அத்திவரதர் தரிசன நிகழ்வு இன்று தொடங்குகிறது.

Update: 2019-06-30 21:11 GMT
காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அத்திவரதர் தரிசன நிகழ்வு இன்று தொடங்குகிறது. இதற்காக கடந்த 27ஆம் தேதி குளத்தில் இருந்த அத்திவரதர் சிலை 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே எடுக்கப்பட்டு வசந்த மண்டபம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. இன்று மக்களின் தரிசனத்திற்காக அத்திவரதர் சிலை திறக்கப்படுகிறது. இன்று முதல் 48 நாட்களில் 30 நாட்கள் அத்திவரதர் சயனநிலையிலும், 18 நாட்கள் நின்றநிலையிலும் காட்சி அளிக்க இருக்கிறார். இதையொட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்