மேட்டுப்பாளையம் ஆணவக்கொலை சம்பவம் :காதலனை தொடர்ந்து காதலியும் பலி
மேட்டுப்பாளையம் ஆணவக்கொலை விவகாரத்தில் காதலனை தொடர்ந்து காதலியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வேறு சாதி பெண்ணை திருமணம் செய்த இளைஞர் கனகராஜ் அவரது சகோதரன் வினோத்தால் படுகொலை செய்யப்பட்டார். தாக்குதலின் போது படுகாயம் அடைந்த கனகராஜின் காதல் மனைவி வர்ஷினி பிரியா, உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் மனம் உடைந்த வர்ஷினி பிரியாவின் பெற்றோர், உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் வினோத்துக்கு உடந்தையாக இருந்த கந்தவேலு, ஐயப்பன், சின்னராசு ஆகிய மூன்று பேரையும் கைது செய்ய வேண்டும் என்றும், வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தங்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வரை உடலை வாங்க போவதில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.