"முரட்டு பெரும்பான்மைக்கு அஞ்சாமல் செயல்பட வேண்டும்" - தமிழக எம்.பி.க்களுக்கு ப.சிதம்பரம் கோரிக்கை

சிவகங்கையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகனும் அத்தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டனர்.

Update: 2019-06-08 02:31 GMT
சிவகங்கையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்  தேர்தல் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகனும் அத்தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய  ப.சிதம்பரம்,  நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வுக்கு உள்ள முரட்டு பெரும்பான்மைக்கு அஞ்சாமல், தமிழக எம்.பி.க்கள் செயல்பட வேண்டும் 
என்று கேட்டு கொண்டார். பின்னர் பேசிய கார்த்தி சிதம்பரம் தமிழக மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் செயல்படுத்த அனுமதிக்க போவதில்லை 
என்று கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்