மதுரை : பிரபல ரவுடி கொலை வழக்கில், இருவர் சரண்
தலையை துண்டித்து ரவுடியை கொன்ற வழக்கில் 2 பேர் மதுரை 4வது அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
தலையை துண்டித்து ரவுடியை கொன்ற வழக்கில் 2 பேர் மதுரை 4வது அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மதுரை திருநகரை சேர்ந்த பிரபல ரவுடி சவுந்திரபாண்டி கடந்த 25அம் தேதி மர்ம கும்பலால் கொல்லப்பட்டார். பின்னர் அந்த கும்பல் அவரது தலையை பழங்காநத்தம் ரயில்வே பாலத்துக்கு அடியில் வீசிச்சென்றது. இந்த கொலை சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில் அந்த கொலையில் தொடர்புடைய ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சந்தோஷ்குமார், தெட்சிணாமூர்த்தி ஆகிய இருவரும் மதுரை 4வது அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை வருகிற 17ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு கவுதமன் உத்தரவிட்டார்.