பைனான்சியர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் : கூலிப்படையை ஏவி மனைவியே கொன்றது அம்பலம்
மதுரை அலங்காநல்லூரில் பைனான்சியர் இளங்கோவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மதுரை அலங்காநல்லூரில் பைனான்சியர் இளங்கோவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 31ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தில், அவரது மனைவியான அபிராமி என்பவர், கூலிப்படையை ஏவி கொலை செய்திருப்பது அம்பலமாகி உள்ளது. வட்டித் தொழில் செய்து வந்த இளங்கோவனுக்கு அபிராமி இரண்டாவது மனைவி. அவரது 3 மகள்களுடன், இளங்கோவன் அலங்காநல்லூர் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அபிராமியின் மூத்த மகளுக்கு, இளங்கோவன் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அபிராமி, கூலிப்படை ஏவி இளங்கோவனை, தீர்த்துக்கட்டி உள்ளார். முன்னுக்குப்பின் முரணாக பேசிய அபிராமியிடம், போலீசார் விசாரணை நடத்திய போது, இந்த தகவல்கள் தெரியவந்துள்ளது. இதையடுத்து அபிராமி மற்றும் அவரது மகள் அனுசுயா ஆகிய இருவரையும் கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர். ஏற்கனவே கூலிப்படையை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.