ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : 450க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது வழக்குப்பதிவு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 450க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2019-06-02 08:57 GMT
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 450க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நேற்று திருவாரூரின் பல இடங்களிலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
Tags:    

மேலும் செய்திகள்