திருவாரூர் - காரைக்குடி பயணிகள் ரயில் சேவை துவக்கம்
திருவாரூர்- காரைக்குடி இடையே குறுகிய ரயில் பாதையானது அகல ரயில் பாதையாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.
தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் நடந்த சோதனை ஓட்டத்திற்கு பின் ரயில் சேவையானது இன்று தொடங்கியது. கடந்த10 ஆண்டுகளுக்கு பின்னர் தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவையால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 160 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பாதையில் பயண நேரம் என்பது 6 மணி நேரம் ஆவதாகவும் கழிவறை வசதிகள் செய்யப்படாததால் சிரமத்தை சந்திக்க வேண்டியிருப்பதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்தப் பிரச்சினைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.