ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு 20 சதவீதம் குறைப்பு
பணிமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் இதுவரை பெற்று வந்த 70 விழுக்காடு பதவி உயர்வு தற்போது 50 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் தற்போது 70 விழுக்காடு பதவி உயர்வு பணிமூப்பு அடிப்படையிலும், 30 விழுக்காடு போட்டித்தேர்வு மூலமாகவும் நிரப்பப்பட்டு வருகிறது. இதனை மாற்றி 50 விழுக்காடு இடங்கள் போட்டித்தேர்வு மூலமாகவும், 50 விழுக்காடு இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பிக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் என்று உத்தரவிட்டுள்ளார். ஜூன் ஒன்றாம் தேதி நிலவரப்படி இந்த காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது என நேற்று உத்தரவிட்ட நிலையில், பதவி உயர்வையும் 20 விழுக்காடு குறைத்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.