கள்ளக் காதலுக்கு இடையூறு... கணவனுக்கு அடிஉதை...
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்த கொலை செய்ய முயன்ற மனைவி, தாக்குதல் நடத்திய காதலன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போதமலை அடிவாரத்தில் உள்ள ஜேஜேகானி பகுதியில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளி முருகேசன். அவருக்கு பிரியா என்ற பெண்ணுடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இருவரும் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், மல்லூர் பகுதியைச் சேர்ந்த கவுதம்ராஜ் என்பவருடன் பிரியாவுக்கு அறிமுகமாகி உள்ளார். நட்பு அதிகமாகி, காதலாகமாறியது. இதனால், அதிர்ச்சியடைந்த கணவன் முருகேசன், மனைவி பிரியா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தகராறு நடந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை கொலை செய்ய முடிவு செய்த மனைவி ப்ரியா, முருகேசனுக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, கள்ளக் காதலன் கவுதம்ராஜூடன் சேர்ந்து தாக்கியுள்ளார். இதில், தப்பிய கணவன் காவல் நிலையத்தில், மனைவி மற்றும் கள்ளக்காதலன் மீது புகாரளித்தார். இதுதொடர்பாக விசாரித்த போலீசார், முருகேசனின் மனைவி ப்ரியா, அவரது கள்ளக் காதலன் ப்ரியா ஆகியோரை கைது செய்தனர். கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.