காய்கறிகள் விலை கடும் உயர்வு...

சென்னை கோயம்பேடு சந்தையில், காய்கறிகளின் விலை தொடர்ந்து, உயர்ந்து கொண்டே வருவதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2019-05-02 06:05 GMT
மழை இல்லாததால், விளைச்சல் குறைந்து, கோயம்பேடு சந்தைக்கு, காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 20 ரூபாய்க்கு விற்பனையான கேரட், மூன்று மடங்கு உயர்ந்து, தற்போது கிலோ ஒன்றுக்கு 60 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. 30 ரூபாய் இருந்த பீன்ஸ், தற்போது நான்கு மடங்கு விலை அதிகரித்து கிலோ ஒன்று 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பச்சை மிளகாய் 40 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கோடைகாலம் என்பதால் இந்த விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்