குழந்தை விற்பனை விவகாரம் எதிரொலி - மகளிர் காவல்நிலையத்தில் விசாரித்து சென்ற தம்பதி

கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு பகுதியை சேர்ந்த சுந்தரபாண்டியன் - ராஜகுமாரி தம்பதிக்கு தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.

Update: 2019-04-27 12:28 GMT
கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு பகுதியை சேர்ந்த சுந்தரபாண்டியன் - ராஜகுமாரி தம்பதிக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த 2 நாட்களில் குழந்தை காணாமல் போனது. இந்நிலையில், குழந்தை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கும், இதற்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, சுந்தரபாண்டியன், ராஜகுமாரி தம்பதியினர், ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து, குழந்தை விற்பனையில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு  தொடர்பு இருக்குமா என விசாரித்து சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்